Posts

மலேசியா வாழ் ஹிந்துக்களுக்கு !

Image
இந்து அறப்பணி வாரியம் அமைக்கும் வாக்குறுதி தோல்வியா ! மடானி சாதனையா இல்லை சோதனையா ! மலேசியா வாழ் ஹிந்துக்களுக்கு ! பினாங்கு மாநிலத்தை தவிர மற்றப்பிற பேராக், சிலாங்கூர், நெகிரி, மலாக்கா,ஜொகூர், பகாங் மற்றும் கெடா ஆகிய மாநிலங்களில் இந்து அறப்பணி வாரியம் இன்னும் அமையாதது அம்மாநில அரசுகளில் அங்கம் வகிக்கும் இந்திய ஹிந்து மக்கள் பிரதிநிதிகளின் தோல்வியை காண்பிக்கின்றன. குறிப்பாக 2018 ஆண்டு நம்பிக்கை கூட்டணியின் வாக்குறுதிகளில் ஒன்றாக பினாங்கு மாநிலத்தை முன்மாதிரியாக கொண்டு, பெருவாரியாக ஹிந்துக்கள் வாழும் மாநிலங்களில் ஹிந்து அறப்பணி வாரியம் அமைக்கப்போம் என்கிற வாக்குறுதி நிறைவேற்றப்படமால் இருப்பது மற்றுமொரு நம்பிக்கை கூட்டணியின் இந்திய தலைவர்களின் தோல்வியை மெய்ப்பிக்கிறது. ஆட்சியில் அமர்ந்து 3 ஆண்டுகளில் நம்பிக்கை கூட்டணி ஆளும் மாநிலங்களில் இந்து அறப்பணி வாரியம் அமைக்கும் முயற்சிகள் மற்றும் தொடக்கப்பணிகள் இன்று நாள் வரையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்கிற கேள்வியும் ஐய்யமும் நாட்டில் வாழும் ஹிந்து மக்கள் சகோதரர்களிடம் கேள்விகளாய் எழுகிறது. அறப்பணி வாரியம் அமைப்போம் ஆலய நிலங்கள் பாதுக்காக்கப்பட...

Dr.V.David - Menutupi* *Kota Disehelai Tirai

Image
Dr.V.David - Menutupi Kota Disehelai Tirai Hari Ini 26 August 2025 Dr.V.David Vethamutu Akan Mencecah Umurnya 93 Tahun. Seorang Pemimpin Yang Jasanya Tidak Boleh Dilupai Atau Diabai Dalam Arena Politik Malaysia, Antarabangsa Dan Juga Kebajikan Pekerja. Tetapi Jasa dan Pengorbanan Mendiang  Semakin Diaibkan dan Dihilangkan Oleh Sekumpulan atau Pihak Tertentu Yang Mempunyai Niat Tersirat Sendiri Sehingga  Pihak Yg Harus Mendukungnya, Mengingkari Mengotakan Janji Pada Tahun 2008 Untuk Menamakan Jln Raya Barat Di Petaling Jaya Sempena Memperingati Beliau. Janji Sekadar Janji Yang Dah Jadi (Kanji) Dikatakan Dalam Bahasa Tamizh (Bubur). Setahu Saya Berbagai Alasan Terutamanya Nama Beliau Dikaitkan Dgn Seorang Individu Agamawan Dan Kononnya Ia Akan Menyebabkan Kehilangan Atau Sokongan Kepada Agenda Politik Pihak Tertentu Yang Menjanjinya. Demi Kerana Kuasa Sewenang Wenangnya Jasa Mendiang Dikorbankan Atas Alasan Yang Tidak Munasabah Dan Tidak Boleh Menerima Sesekalipun. Berbagai Baga...

அகற்றியது நன்று நிலைநிறுத்துவது என்று !

Image
  2017 ஆம் ஆண்டு நடந்த பெயர்மாற்று சர்ச்சைக்கு 2021 ஆம் ஆண்டு நிறுத்திவைப்பு என தீர்வினை பெற்றுள்ளதுதான்  நம்பிக்கை கூட்டணி அரசும் அதன் இந்தியத்தலைவர்களும். 100 ஆண்டுகளை கடந்த வரலாற்றுப்பூர்வ செட்டி திடலின்  பெயரை நிலைநிறுத்த தவறியது மற்றும் நிறுத்திவைப்பு என நாடகம் நடத்தியதுதான் உங்கள் மூன்று தவணை சிலாங்கூர் மாநில நல்லாட்சியின் செயலா ! 2008 இல் செட்டி திடலின் தொகுதிக்குட்பட்டு வெற்றிப்பெற்றவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு மானோகரன் மலையாளம், அதன் பிறகு 2013 இல் அத்தொகுதியில் வெற்றிப்பெற்றவர் இன்றைய சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு  உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ். இன்று அத்தொகுதி ஜசெக வை பிரதிநிதித்து ஒரு சீனர் மாண்புமிகு டோனி லியோங் வெற்றிப்பெற்றுள்ளார். மேலும், மூன்று தவணை கிள்ளானில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மாண்புமிகு உலக அறிவாளி சார்லஸ் சந்தியாகு என்கிற தியாகு என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2008 முதல் இன்று 2021 வரை அத்தொகுதியில் நகராண்மைக்கழக உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஜசெகவை பிரதிநிதிப்பவர்கள். தொடர்ந்து இந்தியர்களே பெருவாரியாக நகராண்மைக்கழக...

நாம் தமிழர் உணர்வை மழுங்கடிக்கும் ரஜினியும் கமலும் !

Image
  இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் தத்துவக்கொள்கை முழக்கத்தை அண்ணன் சீமானின் பெரு முயற்சியை திசைதிருப்பவும் மழுங்கடிக்க செய்யவும், தமிழர்களை தொடர்ந்து நுகர்வு கலாச்சாரத்தில் சினிமா மாயையில் நிலைத்திருக்கவும் கூத்தாடிகளான ரஜினியும் கமலும் தீவிர அரசியல் களத்தில் இறங்கியிருப்பதனை மெய்ப்பிக்கின்றன. ஆரியத்திடம் விடுதலைப்பெற்று திராவிடத்தில் அகப்பட்டுக்கொண்ட தமிழர்கள், திராவிடத்தின் மிக முக்கிய அளுமையாக விளங்கிய நுகர்வுப் பண்பாட்டில் சிறையானோம். அதாவது சினிமா மாயையில் இன்றும் தொடர்ந்து திராவிடக்குடும்பத்தின் வழிவந்தவரான ரஜினியும், ஆரியப்பார்ப்பனக் குடும்பத்தின் வழி வந்தவரான கமலும் தமிழகத்தில் மிக முக்கிய இடங்களை தங்களுக்கே உரித்த பாணியில் தக்கவைத்துக் கொண்டு ஆட்சி செய்து வருகின்றன திரையுலகில். தமிழர்கள் இனவுணர்வுப்பெற்று இனமான சிந்தனையோடு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி விடக்கூடாதிலும், தொடர்ந்து இருட்டறையிலே தங்கள் தலைவனை தமிழர்கள் அடையாளம் காண வேண்டும் என்பதில் இந்த இருவரும் உறுதியுடன் செயல்படுவதை நன்குணர முடிகிறது. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தாக்கத்தினால் தமிழக இளைஞர்க...

தாழ்த்தப்பட்ட அசுரன்கள்

Image
  வெக்கை எனப்படும் தமிழ் நாவலை தழுவி உருவாக்கப்பட்ட ஆவணத் திரைப்படம் அசுரன். வெற்றிமாறனின் இயக்கத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக திரையில் வெளிக்கொணர்ந்துள்ளார், பஞ்சாமி நில அபகரிப்பை மையப்படுத்தி வெக்கை நாவலின் துணைக்கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டு, இந்திய நிலகண்டத்தின் மூத்தக்குடி மக்களாகிய வள்ளுவக் கணிகையர் எனப்படும் சமூக வழி வந்த மக்களின் பெருந்துயரை சுதந்திர இந்தியாவில் அம்மக்களின் நிலங்களை பெருநிலக்கிழார்களும், பண்ணையார்களும் திட்டமிட்டு ஆங்கிலேயர்கள் வழங்கியதை நயவஞ்சகமாய் திருடும் கொடூரத்தையும் அதனை எதிர்த்து அம்மக்கள் போராடும் களத்தையும் எளிமையுடன் கூடுதல் வன்முறைகளுடன் காட்சியகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இறுதியாக அப்படத்தில் ஒரு வசனம் அரங்கேறுகிறது அதவாது : காடு இருந்த புடுங்கிக்குவானுக ரூபா இருந்த எடுத்துக்குவானுக படிப்ப மட்டும் நம்மக்கிட்ட இருந்து எடுத்துக்க முடியாது... இதனை ஏற்க எனோ என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை ஆயினும் இச்சமூக வழி வந்த மக்களில் கல்விக்கற்றவர்களும் இறுதியில் விலைக்கு போய் நிற்பதுவே பெரும் அவலம் அதன் எடுத்துக்காட்டாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொ...

எம்மக்களே !

Image
அரசியல்  அகதிகளாய்  உரிமையற்ற  ஊமைகளாய்...  காலமாய் களமாய் ! கோனும்  கோலும்  சதிராட்டமாட  வெள்ளோட்டக் காட்சிகள்  பொழுதொரு நாள்... வண்ணமாய் வளம் வர ! முடிவில்லாத  கதைகளுக்கு  முற்றுப்புள்ளியிட   கோமாளிகள்  துணிவதேன்... வரலாற்றுப்பிழையா ! விடியலும்  புரட்சியும் சேமப்படையில்  அலுத்திற்று... அடக்குமுறையால் ! ஒடுக்குமுறைகள்   மரணித்துப்போகாதா ! ஜனநாயக உரிமை நிலைப்பெறாதா ! வேட்கை விரக்தியால் ! அடிமை சாசனம்  நிரந்திரமா !  மாற்றான் சுதந்திரம் தான் சுவாசமா...  எம்மக்களே ! ஆக்கம் - கரிமா வளவன்  28.2.2020

மரமே மரமே

Image
மரமே மரமே உன் மடியில் சில நேரம்... காற்றை சலித்து நிழலாய் விரிந்து கனிகளைப் பெற்றெடுத்து அருள் புரிந்தாயே... பட்டுப்போய் இலையுதிர்ந்து மீண்டும் மீண்டும் உயிர்பெறும் ஜீவராசி  நீ... எம்பெருமானுக்கும் அடைக்கலம் தந்த தாயே... உன்னை தேவதையாய் அருளிப்பேன் நான் கடவுளெனில்... ஒற்றைக்கால் தவம் புரிந்து வாழ்வியல் தத்துவம் பறைசாற்றுகிறாய் காற்றுக்கும் புயலுக்கும்... நன்றி மறந்த மானுடம் பழித்து விடாதே மன்னித்துவிடு வெறும் மரக்கட்டையென்று கருணைத் தாயே... மனிதக்குலமே வாரீர் திருத்தம் செய்வோம் மரத்தை அறுத்தல் அறத்தை அழித்தல் கட்டாய மரணதண்டனை வகைச் செய்வோம்... ஆக்கம் - கரிமா வளவன் 2013