எம்மக்களே !
அரசியல் அகதிகளாய் உரிமையற்ற ஊமைகளாய்... காலமாய் களமாய் ! கோனும் கோலும் சதிராட்டமாட வெள்ளோட்டக் காட்சிகள் பொழுதொரு நாள்... வண்ணமாய் வளம் வர ! முடிவில்லாத கதைகளுக்கு முற்றுப்புள்ளியிட கோமாளிகள் துணிவதேன்... வரலாற்றுப்பிழையா ! விடியலும் புரட்சியும் சேமப்படையில் அலுத்திற்று... அடக்குமுறையால் ! ஒடுக்குமுறைகள் மரணித்துப்போகாதா ! ஜனநாயக உரிமை நிலைப்பெறாதா ! வேட்கை விரக்தியால் ! அடிமை சாசனம் நிரந்திரமா ! மாற்றான் சுதந்திரம் தான் சுவாசமா... எம்மக்களே ! ஆக்கம் - கரிமா வளவன் 28.2.2020