Posts

Showing posts from September 11, 2016

கவிதைகள்

Image
சாத்தியமா !!! மயங்குதலன்று  தெளிதலன்று... உளறுதலன்று தொலைதலன்று... சாத்தியமா காதல் காதலில் காதலன்று...                                               கரிமா வளவன்  

கவிதைகள்

Image
மனிதனுக்காக. இந்த நொடி பொழுதில் எங்கோ ஓர் இல்லத்தின் கூரை மீது குண்டு மழை பொழிந்திருக்கலாம்... எங்கோ ஓர் தெருவில் ஒரு போராட்டக்காரன் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம்... எங்கோ ஓர் அடர்ந்த காட்டுக்குள் ஒரு இனத்தையே அழித்து புதைக்கப்பட்டிருக்கலாம்... எங்கோ ஓர் பூட்டிய அறையில் அந்த பெண் அனுமதியின்றி ஒரு மனித மிருகம் புணர்ந்துக் கொண்டிருக்கலாம்... எங்கோ ஓர் குப்பைத்தொட்டியில் அவசரமாக ஈன்றெடுத்த அந்த சிசுவை வீசியிருக்கலாம்... அத்தனையும் பார்த்துக்கொண்டு இந்த நொடி பொழுதில் ஒரு விதை முளைத்து மனிதனுக்காக .................................................................. கரிமா வளவன் 
Image
100 ஆண்டு மலயன் ரயில்வே வரலாற்றை அழிப்பதா ?          தலைநகர் பிரிக்பீல்ட்சில் விவேகானந்தா ஆசிரமத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான மலாயன் ரயில்வே வீடுகள் எந்நேரத்திலும் உடைப்படும் அபாய நிலையில் இருக்கின்றன, அவ்வரலாற்று மிக்க இடத்தை அழித்து புதிய சொகுசு அடுக்கு மாடி வீடமைப்புத் திட்டம் அங்கே எழுப்பப்படும் என்று டிபிகேஎல் அறிவித்து எம்அர்சிபி ( ) நிறுவனத்துக்கு அனுமதியும் வழங்கியுள்ளது.        இந்த சொகுசு அடுக்குமாடி  வீடுகள் ஜாலான் சான் ஆ தோங், லோரோங் சான் ஆ தோங், ஜாலான் ரொசாரியோ மற்றும் அருகாமையில் அமைந்துள்ள ஒரு திறந்த வெளி நிலத்திலும் எழுப்பப்படும், இப்புதிய சொகுசு மாடி கட்டிடத்தால் 1915 ஆண்டிலிருந்து இருக்கும் அனைத்து வரலாற்று சின்னங்களும் அழிவை நோக்குவதோடு இல்லாமால் பிரிக்பீல்ட்ஸ் இடத்தில் மிஞ்சி இருக்கும் ஒரே ஒரு திறந்த வெளி மைதானமும் காணமால் போய்விடும்.       அந்த 100 ரயில்வே குவாட்டர்ஸ் வீடுகளும் அதனுடன் திறந்த மைதானமும் 1970 இல் சீலாங்கூர் மாநிலத்தின் நில பாதுக்காப்பு கேசட் செய்யப்பட்ட நில...