100 ஆண்டு மலயன் ரயில்வே வரலாற்றை அழிப்பதா ?
தலைநகர் பிரிக்பீல்ட்சில் விவேகானந்தா ஆசிரமத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான மலாயன் ரயில்வே வீடுகள் எந்நேரத்திலும் உடைப்படும் அபாய நிலையில் இருக்கின்றன, அவ்வரலாற்று மிக்க இடத்தை அழித்து புதிய சொகுசு அடுக்கு மாடி வீடமைப்புத் திட்டம் அங்கே எழுப்பப்படும் என்று டிபிகேஎல் அறிவித்து எம்அர்சிபி ( ) நிறுவனத்துக்கு அனுமதியும் வழங்கியுள்ளது.
இந்த சொகுசு அடுக்குமாடி வீடுகள் ஜாலான் சான் ஆ தோங், லோரோங் சான் ஆ தோங், ஜாலான் ரொசாரியோ மற்றும் அருகாமையில் அமைந்துள்ள ஒரு திறந்த வெளி நிலத்திலும் எழுப்பப்படும், இப்புதிய சொகுசு மாடி கட்டிடத்தால் 1915 ஆண்டிலிருந்து இருக்கும் அனைத்து வரலாற்று சின்னங்களும் அழிவை நோக்குவதோடு இல்லாமால் பிரிக்பீல்ட்ஸ் இடத்தில் மிஞ்சி இருக்கும் ஒரே ஒரு திறந்த வெளி மைதானமும் காணமால் போய்விடும்.
அந்த 100 ரயில்வே குவாட்டர்ஸ் வீடுகளும் அதனுடன் திறந்த மைதானமும் 1970 இல் சீலாங்கூர் மாநிலத்தின் நில பாதுக்காப்பு கேசட் செய்யப்பட்ட நிலங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த விவேகானந்தா ஆசிரம சார்ச்சையியின் போது இங்கு நேராடியாக வருகை தந்த சுற்றுலாத் துறை அமைச்சர் மாண்புமிகு டத்தோ நஸ்ரி அசிஸ் விவேகானந்தா ஆசிரமத்துடனும் இந்த திறந்த வெளி மைதானமும் பாதுக்காக்கப்பாட வேண்டிய வரலாற்று இடங்கள் என்று துணிச்சலாக தெரிவித்தார்.
கேசட் செய்யப்பட்ட இந்த நிலங்களை எப்படி டிபிகேஎல், எம்ஆர்சிபி நிறுவனத்துக்கு வழங்கியது, அதன் இன்றைய நில சந்தை விலை எவ்வுளவு , எத்தனை விலைக்கு அந்த நிறுவனம் கொள்முதல் செய்தது என்று முழு தகவலையும் பொதுமக்களுக்கு டிபிகேஎல் விளக்க வேண்டும், மேலும் ஊராட்சி குழு மன்ற சட்டத்திட்டத்தின் படி ஒரு புதிய நீர்மாணிப்பு வளர்ச்சித்திட்டம் எழுப்பப்படும் பொழுது அவ்வட்டார மக்களிடம் ஒரு திறந்த பொது விவாதம் நடத்தப்பட்டு முறையே அனுமதியோடு இந்த வளர்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

Comments
Post a Comment