மலேசியா வாழ் ஹிந்துக்களுக்கு !
இந்து அறப்பணி வாரியம் அமைக்கும் வாக்குறுதி தோல்வியா !
மடானி சாதனையா இல்லை சோதனையா !
மலேசியா வாழ் ஹிந்துக்களுக்கு !
பினாங்கு மாநிலத்தை தவிர மற்றப்பிற பேராக், சிலாங்கூர், நெகிரி, மலாக்கா,ஜொகூர், பகாங் மற்றும் கெடா ஆகிய மாநிலங்களில் இந்து அறப்பணி வாரியம் இன்னும் அமையாதது அம்மாநில அரசுகளில் அங்கம் வகிக்கும் இந்திய ஹிந்து மக்கள் பிரதிநிதிகளின் தோல்வியை காண்பிக்கின்றன.
குறிப்பாக 2018 ஆண்டு நம்பிக்கை கூட்டணியின் வாக்குறுதிகளில் ஒன்றாக பினாங்கு மாநிலத்தை முன்மாதிரியாக கொண்டு, பெருவாரியாக ஹிந்துக்கள் வாழும் மாநிலங்களில் ஹிந்து அறப்பணி வாரியம் அமைக்கப்போம் என்கிற வாக்குறுதி நிறைவேற்றப்படமால் இருப்பது மற்றுமொரு நம்பிக்கை கூட்டணியின் இந்திய தலைவர்களின் தோல்வியை மெய்ப்பிக்கிறது.
ஆட்சியில் அமர்ந்து 3 ஆண்டுகளில் நம்பிக்கை கூட்டணி ஆளும் மாநிலங்களில் இந்து அறப்பணி வாரியம் அமைக்கும் முயற்சிகள் மற்றும் தொடக்கப்பணிகள் இன்று நாள் வரையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்கிற கேள்வியும் ஐய்யமும் நாட்டில் வாழும் ஹிந்து மக்கள் சகோதரர்களிடம் கேள்விகளாய் எழுகிறது.
அறப்பணி வாரியம் அமைப்போம் ஆலய நிலங்கள் பாதுக்காக்கப்படும், ஒருங்கிணைக்கப்படும், என்று நம்பிக்கை கூட்டணி இந்திய தலைவர்கள் பேசிய வசனங்களும், வாக்குறுதிகளும் இன்று வரை கிணற்றில் போடப்பட்டக் கல் போன்று கிடக்கிறது.
நாட்டில் வாழும் ஹிந்து மக்களின் நம்பிக்கைகள், வழிப்பட்டு முறைகள் மற்றும் அதன் வழிப்பாட்டு தளங்களை எந்த அமைப்பின் மூலம் எப்படி, எவ்வாறு பாதுகாக்கப்படும் என்கிற குழப்பத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒற்றுமைத் துறை அமைச்சு எந்த கோட்ப்பாட்டின் கீழ் இயங்குகிறது என்றும், அறப்பணி வாரியம் அமைப்பதில் ஏதேனும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறதா என்பதனை அவர்கள் தங்கள் மனசாட்சிக்குட்பட்டு ஹிந்து மக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் ஒற்றுமைத்துறை அமைச்சு செயல்படுவது மக்களின் வரிப்பணம் வீண் விரையம் இழுத்து மூடுவதே சிறப்பு
உரிய நடவடிக்கை எடுத்து அறப்பணி வாரியம் அமைக்கும் முயற்சியில் காலம் தாழ்த்தாது முதற்கட்டப்பணிகளை இனிமேலும் மேற்கொள்வார்களா இந்த நம்பிக்கை கூட்டணி ஹிந்துத்துவ தலைவர்கள்...
ஆக்கம். சிவசீலன்.
Comments
Post a Comment