Posts

Showing posts from August 7, 2016

DAP

Image
    கெர்க் கீம் ஹோக் ஒரு சகாப்தம் – குலசேகரன்   ஜனநாயக செயல்கட்சியின் முன்னாள் தேசியப் பொதுச் செயலாளரான கிம் ஹொக் அவர்களின் 60 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மிகவும் எளிமையாக மலாக்கா மக்கோத்தா மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது. புற்று நோயினால் பாதிப்புற்று இருக்கும் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்து கொண்டிருக்கும் அவரை ஜனநாயக செயல்கட்சியின் முக்கிய தலைவர்கள் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.   ஆஸ்திரேலியாவில் பொறியியலாளர் துறையில் பட்டப்படிப்பை முடித்தவரான இவர்,1999 முதல் 2004 வரை ஜனநாயக செயல்கட்சியின் தலைமைப் பொதுச் செயலாளராக அவர் பதவி வகித்து வந்துள்ளார். 1990 முதல் 1995 வரை முதன் முதலாக ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிப்பெற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   மலாக்காவை பூர்வீகமாக கொண்ட இவர் பிறகு தனது சொந்த மாநிலத்தில் கோத்தா மலாக்காவில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். சரியாக 2004 இல் ஜனநாயக செயல்கட்சி தலைமைப் பொறுப்பில் இருந்து விலக, அவரை பின் தொடர்ந்து அந்த தலைமைப் பொறுப்பிற்கு இன்றைய ஈப்போ ப...
Image
டிலோயிட் தணிக்கை நிறுவனம் நம்பகத்தன்மை வாய்ந்ததா !!! அனைத்துலக கணக்காய்வு தணிக்கை நிறுவனமான டிலோயிட் நிறுவனத்தை சாதகமாக பயன்படுத்தி அதன் பெயருக்கு தீராத களங்கத் தை 1எம்டிபி முதலீட்டு நிறுவனம் ஏற்படுத்தியிருக்கிறது. டிலோயிட் நிறுவனம் 1எம்டிபி நிறுவனத்துடன் இணைந்து கடந்த காலங்களில் அந்த முதலீட்டு நிறுவனத்தின் ஊழல்களை மூடி மறைத்து வந்துள்ளது. 1எம்டிபி நிறுவனத்தில் இருந்து களவாடப்பட்ட பல கோடி வெள்ளிகளுக்கு டிலோயிட் கணக்காய்வு தணிக்கை நிறுவனம் பல்வகைகளில் மூடி மறைக்க துணைப் புரிந்து வந்துள்ளது.   சமீபத்திய அமெரிக்கா சட்டத்துறை தலைமையகம் தொடுத்திருக்கும் சிவில் வழக்கு குற்றப்பத்திரிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்கா சட்டத்துறை அலுவலகம் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் முடிவுறும் வரை 1எம்டிபி நிறுவனத்தின் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையானது செல்லாது. இதன் விளைவு டிலோயிட் தணிக்கை கணக்காய்வு நிறுவனத்தின் நம்பகத்தன்மை 1எம்டிபி விவகாரத்தில் கேள்விக்குறியாகவே இருக்கும்.

கலைத்துறையில் களையேடுக்க வேண்டும் இனவாதத்தை

Image
இனம் மதம் மொழி அரசியல் அனைத்தையும் கடந்து அப்பாற்பட்ட ஒரு துறை கலைத்துறை என்பதை அனைவரும் நன்கு உணர்ந்துள்ளார். நம் நாட்டை பொறுத்த வரை கலைத்துறையிலும் இனவாதம் ஊடுறுவாமல் விட்டுவைக்கவில்லை என்பது வேதனைக்குரிய ஒரு தருணமாக நான் உணர்கிறேன். நாம் நாட்டை பொறுத்த வரை காலம் காலமாக பின் தங்கியிருந்த கலைத்துறை இந்த நவீன யுகத்தில் பல திறமைமிக்க ஆக்கப்பூர்வ சிந்தனையுடைய இளைஞர்களால் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருவது மலேசியர்க ளாகிய நாம் அனைவருக்கும் பெருமையளிக்கும் ஒரு விடயமாகும். அவ்வகையில் இந்த பெருமைகளுக்கு இழுக்கு ஏற்படுத்தும் நோக்கத்தில் மலேசிய மக்களால் அதிகம் போற்றப்பட்டு, ஒட்டுமொத்த மலேசிய மக்களின் ஆதரவை பெற்ற ஒலா போலா மற்றும் ஜகாட் திரைப்படங்களை சிறந்தப்பட விருதுக்கு தகுதிப்பெறும் பட்டியலில் சேர்க்காமல், மலாய் மொழி அல்லாத சிறந்தப்பட பிரிவில் சேர்த்துள்ளது என்பது கண்டிக்கத்தக்க ஒரு செயளாகும். ஏன் சேர்க்கப்படவில்லை என்ற கேள்விக்கு மலேசியத் திரைப்பட விருது குழுமத்தை சேர்ந்தவர்கள் தந்த பதிலானது அவ்விருப்படங்களும் மலாய் மொழி முழுமையாக பயன்படுத்தாத திரைப்படங்களாக வரையறுத்துள்ளாத த...