கலைத்துறையில் களையேடுக்க வேண்டும் இனவாதத்தை

இனம் மதம் மொழி அரசியல் அனைத்தையும் கடந்து அப்பாற்பட்ட ஒரு துறை கலைத்துறை என்பதை அனைவரும் நன்கு உணர்ந்துள்ளார். நம் நாட்டை பொறுத்த வரை கலைத்துறையிலும் இனவாதம் ஊடுறுவாமல் விட்டுவைக்கவில்லை என்பது வேதனைக்குரிய ஒரு தருணமாக நான் உணர்கிறேன்.


நாம் நாட்டை பொறுத்த வரை காலம் காலமாக பின் தங்கியிருந்த கலைத்துறை இந்த நவீன யுகத்தில் பல திறமைமிக்க ஆக்கப்பூர்வ சிந்தனையுடைய இளைஞர்களால் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருவது மலேசியர்களாகிய நாம் அனைவருக்கும் பெருமையளிக்கும் ஒரு விடயமாகும்.
அவ்வகையில் இந்த பெருமைகளுக்கு இழுக்கு ஏற்படுத்தும் நோக்கத்தில் மலேசிய மக்களால் அதிகம் போற்றப்பட்டு, ஒட்டுமொத்த மலேசிய மக்களின் ஆதரவை பெற்ற ஒலா போலா மற்றும் ஜகாட் திரைப்படங்களை சிறந்தப்பட விருதுக்கு தகுதிப்பெறும் பட்டியலில் சேர்க்காமல், மலாய் மொழி அல்லாத சிறந்தப்பட பிரிவில் சேர்த்துள்ளது என்பது கண்டிக்கத்தக்க ஒரு செயளாகும்.
ஏன் சேர்க்கப்படவில்லை என்ற கேள்விக்கு மலேசியத் திரைப்பட விருது குழுமத்தை சேர்ந்தவர்கள் தந்த பதிலானது அவ்விருப்படங்களும் மலாய் மொழி முழுமையாக பயன்படுத்தாத திரைப்படங்களாக வரையறுத்துள்ளாத தெரிவித்துள்ளது.
இது எந்த வகையில் நியாயம் பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் இது போன்ற கருத்தாழமிக திரைப்படங்களுக்கு ஊக்குவிப்பு அளித்தல் என்பது மலேசியர்களிடையில் மென்மேலும் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மற்றும் உள்ளுர் திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக திகழும் என்பதில் ஐயமில்லை.
எல்லா வகையிலும் தகுதி வாய்ந்த இந்த இரண்டு திரைப்படங்களையும் திட்டமிட்டே சிறந்தப்படத்திற்கான தேர்வு பட்டியலில் சேர்க்காமல், புதிதாக ஒரு பட்டியலை சேர்த்து அதற்கு மலாய் மொழி அல்லாத என்ற பிரிவை அமைத்து சேர்க்க வேண்டிய கட்டாயம் என்ன? அல்லது இதற்கு பின்னணியில் அரசியல் தலையீடு இருக்கிறத என்றும் கேள்வி எழுகிறது?
இந்த களங்கத்திற்கு அதிருப்தி தெரிவித்து தேர்வுப்பெற்ற இரண்டு கலைஞர்கள் தங்கள் இப்படக் குழு தேர்வில் இருந்து விலகி கொள்வதாகவும் அறிவித்துள்ளார்கள் என்பது நாட்டின் திரைப்பட தேர்வு குழுமத்திற்கு கிடைத்த பேராடியாகும்.

ஆக்கம் - கரிமா வளவன்.

Comments

Popular posts from this blog

மலேசியா வாழ் ஹிந்துக்களுக்கு !

செந்தமிழ் நாட்டாரே.

மரமே மரமே