ஆண்டாண்டு காலமாக நமது தாய் திருநாடான மலேசியாவில் வீற்றிருக்கும்ஆலயங்களில் ஒருசில ஆலயங்கள் சாதிய கட்டமைப்பினால் நிறுவப்பட்டு, பராமாரிக்கப்பட்டு குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர்கள் மட்டுமே முக்கிய பொறுப்புகள் வகிப்பது முதல், ஆலய வழிப்பாட்டு முறையிலும் தலையீட்டு தீண்டாமையை காலம் காலமாக பின்பற்றி நஞ்சேனும் சாதியத்தை இந்த நாட்டிலும், சமூகத்திலும் விளைத்து வந் துள்ளதை யாவரும் மறுக்க முடியாத ஒரு கூற்று. இந்த கொடூர சாதிய சிரங்கை கெட்டியாய் பிடித்து வந்த பினாங்கில் ஒரு ஆலயத்தின் முகத்திரையை கிழித்ததுடன், தமது சீரிய முயற்சியில் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி தலைமையில் ரிம 3 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் சார்பில் இந்தாண்டு மாநில தைப்பூச விழாவில் ஊர்வலமாய் பவனி வரும் தங்க ரதமானது, சாதியப்பேய்களின் கொட்டத்திற்கு விழும் முதல் சவுக்கடி என்றால் மிகையில்லை. பினாங்கு மாநிலத்தில் குற...