Posts

Showing posts from January 5, 2020

நானும் தங்கர் பச்சனும் !

Image
என்னை கவர்ந்த இயக்குனர்களில் ஒருவர் தங்கர் பச்சான் ஆவார், அவரை நான்  அறிந்து  விதம் மிக சுவாரசியமானது ஒரு தடவை வழக்கம் போல தொலைக்காட்சி அமர்ந்து படம் பார்க்க ும் பொழுது, அந்த படத்தில் வந்த அறிமுக பெயர்களில் இவரது பெயர் வந்த விதம் எனக்குள் ஒரு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. வழக்கம் போல் இயக்குனர்கள் குறித்து பெயர் வரும் பொழுது. கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் என்றுதான் வரும் நாமும் அதனையே காலம் காலமாய் படித்திருப்போம். முதன் முதலாய் ஒரு படத்தில் இறுதியாக கதை திரைக்கதை உரையாடல் ஒளி ஓவியம் நெறியாள்கை தங்கர் பச்சான் என்று குறிப்பிட்டிருந்ததை கண்டு மனமகிழ்ந்தேன் அதே வேலை அதிர்ச்சியுமுற்றேன் குழப்பத்தில். ஏனெனில் கதை திரைக்கதை வசனம் கூடா உரையாடல் என்று அறிந்து கொள்ளலாம். இது என்ன ஒளி ஓவியம் மற்றும் நெறியாள்கை என்று எனக்குள் பல கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன. அடியேனும் மழைக்குக்கூட தமிழ்ப்பள்ளி பக்கம் ஒதுங்காதவன் எதோ கண்டதையும் கேட்டதையும் கற்று ஒப்புவித்துக் கொண்டிருந்த தருணங்கள் அக்காலக்கட்டம். அப்போ எனக்கு தெரிந்த என் அண்டை வீட்டு நண்பரிடம் இதற்கு விளக்கம் கேட்டுத் தெரிந்து கொண...