நானும் தங்கர் பச்சனும் !


என்னை கவர்ந்த இயக்குனர்களில் ஒருவர் தங்கர் பச்சான் ஆவார், அவரை நான் அறிந்து விதம் மிக சுவாரசியமானது ஒரு தடவை வழக்கம் போல தொலைக்காட்சி அமர்ந்து படம் பார்க்கும் பொழுது, அந்த படத்தில் வந்த அறிமுக பெயர்களில் இவரது பெயர் வந்த விதம் எனக்குள் ஒரு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. வழக்கம் போல் இயக்குனர்கள் குறித்து பெயர் வரும் பொழுது. கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் என்றுதான் வரும் நாமும் அதனையே காலம் காலமாய் படித்திருப்போம்.
முதன் முதலாய் ஒரு படத்தில் இறுதியாக கதை திரைக்கதை உரையாடல் ஒளி ஓவியம் நெறியாள்கை தங்கர் பச்சான் என்று குறிப்பிட்டிருந்ததை கண்டு மனமகிழ்ந்தேன் அதே வேலை அதிர்ச்சியுமுற்றேன் குழப்பத்தில். ஏனெனில் கதை திரைக்கதை வசனம் கூடா உரையாடல் என்று அறிந்து கொள்ளலாம். இது என்ன ஒளி ஓவியம் மற்றும் நெறியாள்கை என்று எனக்குள் பல கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.
அடியேனும் மழைக்குக்கூட தமிழ்ப்பள்ளி பக்கம் ஒதுங்காதவன் எதோ கண்டதையும் கேட்டதையும் கற்று ஒப்புவித்துக் கொண்டிருந்த தருணங்கள் அக்காலக்கட்டம். அப்போ எனக்கு தெரிந்த என் அண்டை வீட்டு நண்பரிடம் இதற்கு விளக்கம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். நண்பரும் ஒளி ஓவியம் என்றால் ஒளிப்பதிவாளர் என்றும் நெறியாள்கை என்றால் இயக்குனர் என்றும் எனக்கு விளக்கம் அளித்தார்.
இப்பேர்ப்பட்ட நல்ல ஒரு தமிழ் கலைஞர் மற்றும் உணர்வாளரை ஒரு தடவை நெருங்கி சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன் ஒருவரது இல்லத்தில் அதுவும் மலேசியாவில் கிள்ளானில் . மனிதர் 5 அடிக்கும் குறைவான ஒரு உயரம், அவர் தூரத்தில் இருந்து வரும் போதே எனக்குள் மகாகவி பாரதியார் பாரதி படத்தில் நடந்து வருவாரே அப்படித்தான் இவரும் ஒரு மிடுக்குடன் நடந்து வந்தார்.
எல்லோரையும் அறிமுகப்படுத்திவிட்டு என்னை அறிமுகம் செய்யும் என் நண்பர் அவரிடம் நான் ஒரு பத்திரிக்கையாளர் என்று அறிமுகம் படுத்தினார். அடுத்தக்கனமே அவரது கண்கள் என் முகத்தை ஏறிட்டு பார்த்தது. அவரின் உதட்டில் உதிர்ந்த புன்னகையும் நொடிப் பொழுதில் மீட்டுக்கொள்ளப்பட்டது.
பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி முடிந்தவுடன் ஒரு இனிய கலந்துரையாடலை நடத்தினோம் ஆரம்பத்தில் நன்று போய்க்கொண்டிருந்த எங்களது கலந்துரையாடல், எனது ஒவ்வொரு கேள்விக்கணைகளிலும் சூடுபிடிக்க ஆரம்பித்து மனிதர் சற்று நேரத்தில் பரபரப்பாகி, கோபத்தை கொட்டித்தீர்க்க ஆரம்பித்துவிட்டார்.
நிச்சயமாக எங்கள் உரையாடலில் அரசியலும், அன்று தமிழகத்தை வீசி புரட்டிப்போட்ட தானே புயல் மற்றும் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்காக நீதிப்பேற வேண்டி அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள். மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களுடனான அவரது கருத்து முரண்பாடுகள் எல்லாம் குறித்து கேட்டு ஒரு அலசு அலசினேன் மனிதரை.
மனிதர் எல்லாவற்றுக்கும் எனக்கு பதில் அளித்தார் அதில் சில பதில்கள் அமைதியாகவும், சில பதில்கள் அமைதியற்று கோபம் கொந்தளிக்க அளித்தார் என்பதனையும் மறக்க முடியாது. இவர் சுயநலமற்ற தமிழக மண் மற்றும் மக்கள் கொண்டாடப்பட வேண்டிய ஒரு சமூக கலைஞர் என்பதனை அன்று உணர்ந்தேன்.என்றைக்குமே மாற்றானையே வாழ வைக்கும் இந்த திரைத்துறையெனும் கனவுத் தொழிற்சாலை அம்மண்ணின் வாசத்தை ஒளித்திரையில் உட்புகுத்தும் மண்ணின் மைந்தர்களை மட்டுமே கைவிட்டு விடுகிற அவலத்தை எங்கே யாரிடம் சொல்வது.
நினைவுகளுடன் - கரிமா வளவன் 
2014, கிள்ளான் லீட்டில் இந்தியா 

Comments

Popular posts from this blog

மலேசியா வாழ் ஹிந்துக்களுக்கு !

செந்தமிழ் நாட்டாரே.

மரமே மரமே