Posts

Showing posts from March 18, 2018

கவனம் கண்மணிகளே கல்வி கொள்ளையர்களிடம் !

Image
எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் தேர்வு வெளியாகி விட்டது அடுத்துக்கட்டமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வெகுநாட்கள் கழித்து விஞ்ஞானிப்போன்று சிந்தித்து தடுமாறிக் கொண்டிருப்பார்கள் இக்காலக்கட்டத்தில். இந்திய மாணவர்கள் கல்வி கடனாளி சமூகமாக மாறிவிடக்கூடாத அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும், பிள்ளைகளின் கனவு மெய்ப்பட வேண்டும் என்கிற வேட்கையில் பெற்றோர்களின் பொருளாதார அடித்தளமும் அதன்பால் விளையும் முடிவும் ஒரு பக்கம் அம்மாணவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்க, பல்வேறு வகையிலான சவால்களுக்கு மத்தியில் ஒருமித்த கருத்தோடு நிதானமாக சிந்தித்து விவேகமான முடிவுகளை எடுப்பது என்பது ஆழ் கிணற்றில் முழ்கி முத்தெடுப்பதற்கு சமமாகும். இந்த முழ்கி முத்தெடுக்க தடுமாறிக் கொண்டிருக்கும் மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் குறிவைத்து தனியார் கல்விக் கூடங்களைச் சேர்ந்த கொள்ளை கும்பலோன்று, இனிப்பான மதுரசம் சொட்ட சொட்ட தேன் கலந்து பேசி, தனியார் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் விளம்பரம் மேல் விளம்பரம் படுத்தி. மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் சென்று கூவிகூவி அழைத்து முதலாவதாக பதிகின்ற மாணவர்களுக்கு மடிக்கணிணிகள் இலவசம...