மரமே மரமே
மரமே மரமே உன் மடியில் சில நேரம்... காற்றை சலித்து நிழலாய் விரிந்து கனிகளைப் பெற்றெடுத்து அருள் புரிந்தாயே... பட்டுப்போய் இலையுதிர்ந்து மீண்டும் மீண்டும் உயிர்பெறும் ஜீவராசி நீ... எம்பெருமானுக்கும் அடைக்கலம் தந்த தாயே... உன்னை தேவதையாய் அருளிப்பேன் நான் கடவுளெனில்... ஒற்றைக்கால் தவம் புரிந்து வாழ்வியல் தத்துவம் பறைசாற்றுகிறாய் காற்றுக்கும் புயலுக்கும்... நன்றி மறந்த மானுடம் பழித்து விடாதே மன்னித்துவிடு வெறும் மரக்கட்டையென்று கருணைத் தாயே... மனிதக்குலமே வாரீர் திருத்தம் செய்வோம் மரத்தை அறுத்தல் அறத்தை அழித்தல் கட்டாய மரணதண்டனை வகைச் செய்வோம்... ஆக்கம் - கரிமா வளவன் 2013