Posts

Showing posts from August 23, 2020

தாழ்த்தப்பட்ட அசுரன்கள்

Image
  வெக்கை எனப்படும் தமிழ் நாவலை தழுவி உருவாக்கப்பட்ட ஆவணத் திரைப்படம் அசுரன். வெற்றிமாறனின் இயக்கத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக திரையில் வெளிக்கொணர்ந்துள்ளார், பஞ்சாமி நில அபகரிப்பை மையப்படுத்தி வெக்கை நாவலின் துணைக்கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டு, இந்திய நிலகண்டத்தின் மூத்தக்குடி மக்களாகிய வள்ளுவக் கணிகையர் எனப்படும் சமூக வழி வந்த மக்களின் பெருந்துயரை சுதந்திர இந்தியாவில் அம்மக்களின் நிலங்களை பெருநிலக்கிழார்களும், பண்ணையார்களும் திட்டமிட்டு ஆங்கிலேயர்கள் வழங்கியதை நயவஞ்சகமாய் திருடும் கொடூரத்தையும் அதனை எதிர்த்து அம்மக்கள் போராடும் களத்தையும் எளிமையுடன் கூடுதல் வன்முறைகளுடன் காட்சியகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இறுதியாக அப்படத்தில் ஒரு வசனம் அரங்கேறுகிறது அதவாது : காடு இருந்த புடுங்கிக்குவானுக ரூபா இருந்த எடுத்துக்குவானுக படிப்ப மட்டும் நம்மக்கிட்ட இருந்து எடுத்துக்க முடியாது... இதனை ஏற்க எனோ என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை ஆயினும் இச்சமூக வழி வந்த மக்களில் கல்விக்கற்றவர்களும் இறுதியில் விலைக்கு போய் நிற்பதுவே பெரும் அவலம் அதன் எடுத்துக்காட்டாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொ...