தாழ்த்தப்பட்ட அசுரன்கள்

 வெக்கை எனப்படும் தமிழ் நாவலை தழுவி உருவாக்கப்பட்ட ஆவணத் திரைப்படம் அசுரன். வெற்றிமாறனின் இயக்கத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக திரையில் வெளிக்கொணர்ந்துள்ளார், பஞ்சாமி நில அபகரிப்பை மையப்படுத்தி வெக்கை நாவலின் துணைக்கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டு, இந்திய நிலகண்டத்தின் மூத்தக்குடி மக்களாகிய வள்ளுவக் கணிகையர் எனப்படும் சமூக வழி வந்த மக்களின் பெருந்துயரை சுதந்திர இந்தியாவில் அம்மக்களின் நிலங்களை பெருநிலக்கிழார்களும், பண்ணையார்களும் திட்டமிட்டு ஆங்கிலேயர்கள் வழங்கியதை நயவஞ்சகமாய் திருடும் கொடூரத்தையும் அதனை எதிர்த்து அம்மக்கள் போராடும் களத்தையும் எளிமையுடன் கூடுதல் வன்முறைகளுடன் காட்சியகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.



இறுதியாக அப்படத்தில் ஒரு வசனம் அரங்கேறுகிறது அதவாது :
காடு இருந்த புடுங்கிக்குவானுக
ரூபா இருந்த எடுத்துக்குவானுக
படிப்ப மட்டும் நம்மக்கிட்ட
இருந்து எடுத்துக்க முடியாது...
இதனை ஏற்க எனோ என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை ஆயினும் இச்சமூக வழி வந்த மக்களில் கல்விக்கற்றவர்களும் இறுதியில் விலைக்கு போய் நிற்பதுவே பெரும் அவலம் அதன் எடுத்துக்காட்டாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் திமுக அ.ராசா ஆகியோர்கள்.
பஞ்சமி நில மீட்பு மற்றும் உரிமை மீட்பு ஒரு பக்கம் இருக்கட்டும் முதலில் இம்மக்கள் தங்களை பிரதிநிதிக்கும் அரசியல் கட்சிகள் வருணாசிரம கொள்கையை எதிர்க்கும் போர்வையில், இடஒதுக்கீடு எனப்படும் வருணாசிரம தர்மத்தை ஏற்கும் தந்திர அரசியலை புறந்தள்ள வழிமொழிகிறேன். இன்னும் எத்தனை காலம் தமிழர்களுக்குள்ளே சாதிய சகோதர யுத்தத்தை மேற்கொண்டு உங்களில் பிளவுபட்டு உரிமைகளை இழந்து இறுதியில் உங்களுக்கான அடையாளம் தாழ்த்தப்பட்ட !

ஆக்கம்
கரிமா வளவன்

Comments

Popular posts from this blog

மலேசியா வாழ் ஹிந்துக்களுக்கு !

செந்தமிழ் நாட்டாரே.

மரமே மரமே