தமிழர்களின் தார்மீக உரிமையை நிலை நாட்டுவோம்
மலேசியாவில் பேராக் மாநிலத்தில் இன்று உலகப்பிரசித்திப்பெற்ற ஒரு நகராக ஈப்போ பட்டணம் திகழ்கிறது. மலேசியாவை கடந்தும் உலகளாவிய நிலையிலிருந்து ஈப்போ நகரை வலம் வர மக்கள் அதிகளவில் திரண்டு வருவது பெருமைக்குரியதாய் அமைகிறது. மேலும், பேராக் மாநிலத்தை பொறுத்த வரை சுற்றுலாத்துறையை அடுத்து அம்மாநிலம் விவசாயிகளின் சொர்கப்புரியாகவும் திகழ்கிறது. கண்விரியும் பார்வை எல்லாம் நிலங்களுடன் விவசாய பூமியாக காட்சியளிக்கிறது. இன்னும் மண்ணின் மணம் மாறாத மண் வாசனை கலாச்சரத்துடன் இரும்புப்பிடியேன பிடித்து தமிழ் மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள், குறிப்பாக ஏழ்மையான நிலையில் புறநகர் பகுதிகளில். சமீபத்திய புள்ளி விவரத்தில் மலேசியாவில் இன்று ஏழ்மையான மக்கள் வாழும் பட்டியலில் பேராக் மாநிலம் இரண்டாவது நிலையில் இருப்பது நம்மில் எத்தனை பேருக...