தமிழர்களின் தார்மீக உரிமையை நிலை நாட்டுவோம்

                         

                          மலேசியாவில் பேராக் மாநிலத்தில் இன்று உலகப்பிரசித்திப்பெற்ற ஒரு நகராக ஈப்போ பட்டணம் திகழ்கிறது. மலேசியாவை கடந்தும் உலகளாவிய நிலையிலிருந்து ஈப்போ நகரை வலம் வர மக்கள் அதிகளவில் திரண்டு வருவது பெருமைக்குரியதாய் அமைகிறது. மேலும், பேராக் மாநிலத்தை பொறுத்த வரை சுற்றுலாத்துறையை அடுத்து அம்மாநிலம் விவசாயிகளின் சொர்கப்புரியாகவும் திகழ்கிறது. கண்விரியும் பார்வை எல்லாம் நிலங்களுடன் விவசாய பூமியாக காட்சியளிக்கிறது. இன்னும் மண்ணின் மணம் மாறாத மண் வாசனை கலாச்சரத்துடன் இரும்புப்பிடியேன பிடித்து தமிழ் மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்,
குறிப்பாக ஏழ்மையான நிலையில் புறநகர் பகுதிகளில்.

                          சமீபத்திய புள்ளி விவரத்தில் மலேசியாவில் இன்று ஏழ்மையான மக்கள் வாழும் பட்டியலில் பேராக் மாநிலம் இரண்டாவது நிலையில் இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ஏழ்மை என்று சொன்னால் இந்நாட்டைப் பொறுத்த வரையில் மிகவும் மோசமான நிலையில் எந்த பொருளாதார ஊக்குவிப்பும் இல்லாமல், அரசாங்கத்தால் முழுவதும் கைவிடப்பட்ட ஒரு சமூகமாக இருப்பது யாரெனில் அது நிச்சயாம் இந்தியர்களாகத்தான் இருக்க முடியும். ஏழ்மையை மாற்றியமைக்கும் மிகப்பெரிய சக்தியாக விளங்குவது கல்வி எனும் சாவியே, அவ்வகையில் பேராக் மாநிலத்தில் மட்டும் தமிழ்ப்பிள்ளைகள் தங்கள் ஆரம்பக்கல்வியைத் தொடர்வதற்கு இன்றும் 134 தமிழ்ப்பள்ளிகள் இயங்கி கொண்டு இருக்கின்றன. தமிழ்ப்பள்ளிகள் என்று வரும் பொழுது நாம் அனைவரும் அறிந்த ஒன்று அரசாங்கம் நமது தமிழ்ப்பள்ளிகளை மாற்றான்தாய் பிள்ளைப் போன்று வேண்ட வெறுப்பிற்கு நடத்தி வருகின்றது.

                            ஆரம்பக்கல்வியை தாய்மொழி பள்ளிகளில் தொடங்க விரும்பும் அப்பிள்ளைகளுக்கு மழழையர் கல்வியான பாலர்பள்ளியுடன் இயங்கும் தமிழ்ப்பள்ளிகள் மொத்தம் எத்தனை என்றால் 134 பள்ளிகளில் பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இல்லை என்பதை ஆணித்தரமாக அடித்துக் கூறலாம். பாலர் கல்வியை பிற மொழியில் கற்றுத்தேர்ந்த பிள்ளைகள் பின்னாளில் தங்கள் ஆரம்பக்கல்வியை தொடங்குவதற்கு பிற மொழி பள்ளிகளை நாடுவதற்கும், பெற்றோர்கள் தேர்ந்தெடுப்பதற்கும் இது காரணமாக அமைகின்றது. கல்வி அமைச்சு அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் பாலர் கல்வியை தொடங்குவதற்கான எந்த ஒரு உருப்படியான தீர்வையும் திட்டத்தையும் இது நாள் வரை மாநில கல்வி இலாக்காவின் வழி முன்மொழியவில்லை. வேறுமென தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு என பறைசாற்றுவது மட்டும் அதன் இலக்கை அடைந்து விட முடியாது.

                              மாறாக அதற்கு அடித்தளமிடும் வகையில் மாநிலத்தில் பாலர்கல்வி இல்லாத பள்ளிகளில் அதனை தொடங்கிட முழு மூச்சில் நாம் அனைவரும் களம் இறங்க வேண்டுவதுடன், எதிர்வரும் 14வது பொதுத்தேர்தலில் நிகழப்போகும் ஆட்சி மாற்றத்தில் நம்பிக்கை கூட்டணியின் சார்பில் பேராக் மாநிலத்தை தவிர்த்து நாட்டில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் பாலர் கல்வி தொடங்குவதற்கு சாத்தியக்கூறு இருப்பதை உணர்ந்து தமிழர்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணிக்கு வற்றாத பேராதரவினை வழங்க வேண்டுமென என கேட்டுக் கொள்கிறேன்.

                               பேராக் மாநிலத்தில் ஏராளமான தமிழ்ப்பள்ளிகள் அடிப்படை வசதிகளின்றி படு மோசமான நிலைகளில் இருந்து வருவதற்கு காரணம் மாநில தேசிய முன்னணி ஆட்சியின் தமிழ்ப்பள்ளிகளின் மீது அவர்களின் பொறுப்பற்ற செயலை பிரதிபலிக்கிறது. இந்தியர்களை பிரதிநிதிப்பதாக சொல்லும் பேராக் மஇகாவும் கடந்த தேர்தலில் முற்றாக மக்களால் தோற்கடிக்கப்பட்டு மண்ணை கவிழ்ந்தார்கள். இன்று எதோ மாநில முதல்வருக்கு எடுபிடி வேலை செய்யும் உதவியாளர்களாக இருந்து வருகின்றனர். மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டதாக அறிவித்த 2000 ஏக்கர் நிலத்தின் வருமான நிலை இன்னும் மூடு மந்திரமாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி - இதன் இணைக்கட்டிடம் முழுவதும் முடிவுற்றது கடந்தாண்டு டிசம்பரில், இன்று ஜூலை 2017 தொடங்கியும் அதன் கட்டிடம் திறக்கப்படமால் இருப்பது சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்கள் பழைய கட்டிடத்திலியே கல்வியை கற்கும் அவல நிலையில் தள்ளப்பட்டுள்ளார்கள். கட்டிடம் திறக்கப்படமால் இருப்பதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று ஜிஎஸ்டி வரியின் திடிர் கட்டுமானப்பணி பொருட்களின் விலையேற்றத்தால் கட்டிடப்பணியின் விலை உயர்ந்து இன்று பள்ளியின் நிர்வாகம் கையை பிசைந்து நிற்கிறது அதன் மீத தொகையை செலுத்த குத்தகையாளர்களுக்கு. ஜிஎஸ்டி வரி சுமையின் உயர்வை அரசாங்கமே முழு பொறுப்பேற்று அதன் மீத தொகையை செலுத்தி இணைக்கட்டிடம் திறக்க வேண்டுமே தவிர, மாறாக பள்ளியின் மீதும் அதன் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மீதும் திணிப்பது அநியாயம்.

டேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளி - இதன் இணைக்கட்டிடம் பூர்த்தியாகி ஒரு வருடங்கள் கடந்தப் பிறகும் திறக்கப்படாமல் இருக்கும் மர்மம் விலக்கப்பட வேண்டும், அதனுடன் அதன் மர்மத்தையும் கல்வி அமைச்சு பொது மக்களுக்கு விளக்க வேண்டும். ஏன் திறப்பதற்கு இழுத்தடிப்பு மத்திய அரசாங்கத்தில் துணை கல்வி அமைச்சராக கமலநாதன் இருந்தும் பயனில்லை இந்தியர்களுக்கு. கபாலி பட நாயகியுடன் கபாலியின் பிரத்தியோக முதல் காட்சிக்கு அவர் வழங்கிய ஒத்துழைப்பும், ஆதரவும் தமிழ்ப்பள்ளி விவகாரத்திலும் காண்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

கம்பார் தமிழ்ப்பள்ளி - கம்பார் பட்டணத்தில் மையப்பகுதியில் கம்பீரமாக காட்சியளிக்கும் அப்பள்ளியின் நில தகுதியானது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. கம்பார் தமிழ்ப்பள்ளி அமைந்திருக்கும் நிலமானது இன்னும் அப்பள்ளிக்கு மாற்றப்படாமல் அரசாணை வழங்காமல் இருப்பது பல சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது. இந்த நில மாற்று விவகாரம் 2010 ஆம் ஆண்டு முதற்கொன்டு இன்று வரை தீர்க்கப்பட முடியாமல் இருப்பதும் உற்றுநோக்கத்தக்கது. கம்பார் தொகுதி மஇகாவின் தலைவராகவும், ஆட்சிக்குழு உறுப்பினராகவும், மத்தியில் துணை அமைச்சராகவும் இருந்த வீரசிங்கம், இப்பள்ளியின் நில மாற்று விவகாரத்தில் யாரின் நெருக்குதலில் பால் இல்லாத அ-சிங்கமாக அடங்கியிருக்கும் மர்ம முடிச்டு விரைவில் அவிழும் என்பதை தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார். ஏனெனில் இன்று கம்பார் பட்டணம் அசூர வளர்ச்சியடைந்து வருகிறது, அதன் வட்டார சொத்துடைமை மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஆகவே கம்பார் பட்டணத்தில் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இப்பள்ளியின் நிலத்தில் எதெனும் மாற்றுத்திட்டங்கள் அமையுமா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குனோங் ரப்பாட் – இப்பள்ளியை பொறுத்த வரை நீண்ட நோடியதோரு ஜனநாயக செயல் கட்சி நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவால் நிலமும் கிடைக்கப்பெற்று, பிறகு அந்த நிலமும் பறிபோகும் நிலைக்கு சென்று மீண்டும் அதனை மீட்டு வந்து பள்ளிக்கான நிலமாக நிலைநிறுத்தியது முதல் பள்ளிக்கான மானியம், முதற்கொண்டு அதன் கட்டிடப்பணிகள் அனைத்தும் ஆமைப் போன்று நகர்த்திக் கொண்டிருக்கும் கல்வி அமைச்சின் செயல்பாடு மாநில மக்களிடத்தில் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் பெரிய அதிருப்தி அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பள்ளி விவகாரத்தில் கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன் வழங்கிய நாடாளுமன்றத்திலான பதிலானது பச்சைப் பொய் என்பது குறிப்பிடத்தக்கது.

                                                         ஆக்கம் - சிவசீலன் 

Comments