ஓய்ந்து முடிந்தன ரஜினி மற்றும் பா.இரஞ்சித் இருவரும் ஏற்படுத்திய ஆழிப்பேரலை ஒருவகையாக உலகமெங்கிலும், இன்னும் சொல்லப் போனால் ஆழிப்பேரலையின் தாக்கம் அவ்வுளவு எளிதில் மறைந்துவிடாது. அப்படித்தான் ரஞ்சிட் அவர்களின் கபாலி திரைப்படம் ஏற்படுத்திய தாக்கமும். பலரின் மனங்களில் அது இன்னும் அழியா கலங்கரை விளக்காக எரிந்து கொண்டிருக்கின்றன குறிப்பாக மலேசியத்தமிழர்களின் ஆழ்மனங்களில். கபாலி படத்தின் கதைக்களமானது மலேசியத்தமிழர்களின் வாழ்வியலை பிரதிபலித்தாலும், உண்மையிலே திரைக்கதையின் தன்மையானது நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட எந்த வகையான போராட்டங்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் மக்களின் உயிரோட்டமான மெய்யியலாகவே அமையப்பெற்றது. நிஜமாகவே இது இயக்குனரின் தனித்திறமையா அல்லது இயற்கையாகவே அமையப்பெற்றதா என்பது புரியாத புதிர்தான், அப்படி ஒரு வேலை இயக்குனரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமானல் நிச்சயமாக விளக்கம் கேட்பேன். (நான் எங்கே போனாலும் என் பின்னால் சாதி வந்து நிற்கிறது) என்று அலட்சியமாக இயக்குனர் தனது பேட்டியில் குறிப்பிட்டது எத்தனை வேதனைக்குரியமான வலியை அவர் தன்னுடைய இளவயதில...