கைகழுவுவதிலும் கையை முத்தமிடுவதல் வல்லவர்

                                  இது வரை நாட்டில் நடக்காத ஒன்றுதான் !!!

சமீபத்தில் மலேசியா நண்பன் நாளிதழில் வந்த துணை கல்வி அமைச்சர் பி.கமலநாதனின் அறிக்கையானது இது வரை இந்த நாட்டில் நடக்காத ஒன்றுதான். அதனை நிறைவு செய்யவும் இது போன்று வரலாற்றுப்பூர்வ சாதனை படைக்கவும் மலேசிய இந்தியர் கங்கிராஸ் கட்சியினால் மட்டுமே சாத்தியம். எத்தகைய பொறுப்புமிக்க சமுதாய உணர்வை தாங்கிய பதிலை கல்வி துணை அமைச்சரான கமலநாதன் வழங்கியுள்ளார். 

பத்தாங்காலி தமிழ்ப்பள்ளியில் 11 வயதே நிரம்பிய அந்த 9 பிஞ்சு குழந்தைகளிடம் ஒர் நாய் தவறான முறையில் நடந்து கொண்ட விவகாரத்தில், ஒரு துணை கல்வி அமைச்சர் வழங்கியிருக்கும் தனது பேட்டியில் இது ஒன்றும் நாட்டில் நடக்காத ஒரு செயல் அல்ல! என்று துளிக்கூட பொறுப்பில்லாத
அலட்சியமான முறையில் தந்திருக்கும் பதிலானது அமைச்சரின் உண்மையான கோர முகத்தை காண்பிக்கின்றன.

தொடர்ந்து அங்காங்கே ஒரு சில சமுதாய உணர்வுள்ள போராட்டவாதிகள் தமிழ்ப்பள்ளிகளில் எழும் பிரச்சனைகளை கையிலெடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவ்வகையில் சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளியின் கரையான் அரித்து இடிந்து விழும் அபயாத்தில் இருக்கும் அவலத்தை வெளிச்சத்திற்கு கொணர்ந்தார்கள் தினத்தந்தி நாளிதழின் பத்திரிக்கையாளர் சகோதரர் சிவாலெனின் மற்றும் நாடாறிந்த போராட்டவதியான சகோதரர் மித் ரேயரும். 

அவர்களுக்கு துணையாக பக்கபலமாக உண்மையை மக்களுக்கு கொண்டு சேர்த்தது தினத்தந்தி நாளிதழ். இந்த பிரச்சனைக்கும் பொறுப்பற்ற பதிலையே அந்த மாண்புமிகு அமைச்சர் வழங்கினார் என்பது மிகையல்ல. அதவாது சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டிடம் தேவையில்லை என்று ஆணவமான அவர் பதிலை தாங்கி தினத்தந்தி நாளிதழில் வெளிவந்தது. சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளியின் மாணவர்கள் முதல் பெற்றோர்கள் வரை நாட்டிலுள்ள அனைத்து தமிழர்கள் மத்தியில் சினத்தை ஏற்படுத்தின. 

2012 இல் பொதுப்பணித்துறை பரிசோதித்து அப்பள்ளியின் கட்டிடம் பாதுகாப்பில்லை என்று அதிகாரப்பூர்வமாக கடிதம் வழங்கிய பின்னரும் தொடர்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் 2016 வரை பாதுகாபற்ற அக்கட்டிடத்தை பயன்படுத்த அனுமதித்தது முற்றிலும் தவறானது.
அப்படி தவிர்க்க முடியாத எதெனும் சேதங்கள் சிலிம் ரிவர் பள்ளியில் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது,  இல்லை இதற்கும் அவரின் பதிலானது இது ஒன்றும் நாட்டில் நடக்காத விஷயம் அல்ல என்று பதில் கூறுவார? நிச்சயமாக நம் எண்ணிவிடலாம் அந்நபர் கைகழுவுவதிலும், கையை முத்தமிடுவதல் வல்லவர்

Comments

Popular posts from this blog

மலேசியா வாழ் ஹிந்துக்களுக்கு !

செந்தமிழ் நாட்டாரே.

மரமே மரமே