செந்தமிழ் நாட்டாரே.

இதுகாறும்
வலியத்திணித்த எம்மினத்தின்
வரலாற்றுக்கறைப்
பிழையழித்திடல்வேண்டும்
கடுகளவேனுமிடந்தரக் கூடாதிந்தக்
கழிசடைகளுக்கு.

இனத்தாலே திராவிட(ராம்)
நாட்டாலே இந்திய(ராம்)
இனமறைப்பிற்களவில்லையா.

சின்னமேளம்
வடுக கொலைஞரே
குதிருக்குள்ளேங்கப்பனில்லை
கதைப்புரியவில்லையா.

பிழைப்புவாத சிறுநரிக
ளரிமாக்களாவதில்லை.

தரணியாண்ட
வேங்கையினம்
கள்ளநரிக்காலடிகளை
நக்கிப்பிழைத்து வாழ்வதா !

வடவருக்கும் திராவிடருக்கும்
தமிழர் நிலம்தான்
பந்தாடும் மைதானமா !

விடமாட்டோமினிமேலே
தென்னாட்டுப்பார் புகழோங்கிட
அயராதுழைத்திடு செந்தமிழர்
நாட்டாரே.

இமைப்பொழுதும் உணர்த்திடு
நாம் தமிழரென்றும் - நம் மறை
திருக்குறளென்றும்.

கரிமா வளவன்
11.11.2016
x

Comments

Popular posts from this blog

மலேசியா வாழ் ஹிந்துக்களுக்கு !

மரமே மரமே