கவனம் கண்மணிகளே கல்வி கொள்ளையர்களிடம் !


எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் தேர்வு வெளியாகி விட்டது அடுத்துக்கட்டமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வெகுநாட்கள் கழித்து விஞ்ஞானிப்போன்று சிந்தித்து தடுமாறிக் கொண்டிருப்பார்கள் இக்காலக்கட்டத்தில். இந்திய மாணவர்கள் கல்வி கடனாளி சமூகமாக மாறிவிடக்கூடாத அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும், பிள்ளைகளின் கனவு மெய்ப்பட வேண்டும் என்கிற வேட்கையில் பெற்றோர்களின் பொருளாதார அடித்தளமும் அதன்பால் விளையும் முடிவும் ஒரு பக்கம் அம்மாணவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்க, பல்வேறு வகையிலான சவால்களுக்கு மத்தியில் ஒருமித்த கருத்தோடு நிதானமாக சிந்தித்து விவேகமான முடிவுகளை எடுப்பது என்பது ஆழ் கிணற்றில் முழ்கி முத்தெடுப்பதற்கு சமமாகும்.

இந்த முழ்கி முத்தெடுக்க தடுமாறிக் கொண்டிருக்கும் மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் குறிவைத்து தனியார் கல்விக் கூடங்களைச் சேர்ந்த கொள்ளை கும்பலோன்று, இனிப்பான மதுரசம் சொட்ட சொட்ட தேன் கலந்து பேசி, தனியார் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் விளம்பரம் மேல் விளம்பரம் படுத்தி. மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் சென்று கூவிகூவி அழைத்து முதலாவதாக பதிகின்ற மாணவர்களுக்கு மடிக்கணிணிகள் இலவசமாக வழங்கப்படும், தங்கும் வசதி இலவசம், உணவு இலவசம் மற்றும் கையில் பணமும் தரப்படும் போன்ற ஆசை வார்த்தைகளைக்கூறி தங்கள் வலைக்குள் சிக்கவைத்து விடுவார்கள் கல்வியை தவணை முறையில் வட்டியுடன் விலைக்கு விற்கும் இந்த படித்த வெள்ளை கோலர் சட்டைக் கொள்ளையர்கள்.

உண்மையிலே இவர்களது வெற்றி என்பது யாதெனில் ஒர் அளவு நல்லத்தேர்வு அடைந்தவர்களும் சரி அடையாதவர்களும் சரி படிவம் 6 படித்துதான் ஆக வேண்டுமா? ஏன் காலவிரையம் செய்ய வேண்டும் ? அதான் செலவு செய்ய பெற்றோர்கள் இருக்கிறார்களே ? இப்போதுதான் எங்கு திரும்பினாலும் கல்லூரிகள் இருக்கிறதே கடை வரிசைகளில் இரண்டாவது மாடிகளில் பிடிபிடிஎன் கடனுடன் ! சிக்கிரமே படித்து வெலைக்கு சென்று காரையும் வீட்டையும் வாங்கி திருமாணத்தையும் முடித்து சிக்கிரமே நல்ல நிலைக்கு வந்து விடலாம் என்கிற குறுக்கு எண்ணங்களே இந்த படித்த வெள்ளை கோலர் சட்டைக் கொள்ளையர்களின் முதலீடு என்பதை மாணவர்களும் பெற்றோர்களும் நன்குணர வேண்டும்.

சமீபத்தில் ஒரு மாணவி உள்நாட்டு தனியார் கல்லூரியில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு 80% மேல் அதன் கட்டணத்தையும் செலுத்திவிட்டு, மீத 20% கட்டணத்தை செலுத்த முடியாமல் போனதால் அந்த மாணவியின் மருத்துவப்படிப்பிற்கான சன்றிதழை வழங்க மறுத்துவிட்டது அந்த தனியார் மருத்துவக் கல்லூரி. பல இடங்களில் அந்த மாணவியும் அவரது பெற்றோர்களும் மீத 20% கடனை செலுத்துவதற்கு அலையாத இடங்கள் இல்லை ஏராத படிகள் இல்லை, கையெந்தி பிச்சைக் கேட்காத குறைதான் பலரிடமும். இத்தனை இன்னல்களையும் கடந்தப்பிறகே அம்மாணவி தற்சமயம் மருத்துவராகி பணிப்புரிகிறார் என்கிற நல்ல செய்தியும் கேட்க முடிந்துள்ளது.

இன்னொரு பக்கம் ஒரு மாணவி 6ஏ 2பி 3சி எஸ்பிஎம் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்றும் 6ஆம் படிவம் படிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதனை புறக்கனித்துவிட்டு,  ஒரு தனியார் கல்லூரியில் கடன் இல்லாமல் விமான நிறுவன பணியாளர் துறை சார்ந்த படிப்பினை படித்து கொண்டு இருக்கிறார். அம்மாணவிக்கு கொடுத்த இனிப்பான வாக்குறுதியின்படி படித்து முடித்தவுடனையே சிங்கப்பூர் விமான நிலையத்தில் டாலர் மதிப்பிலான சம்பளத்தில் வெலை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளது. சொன்னதைப் போன்று வாக்குறுதியை காப்பாற்றுமா, காப்பாற்றாதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்படியாக எண்ணில் அடங்கா கதைகளையும் அவலங்களையும் அடுக்கி கொண்டே போகலாம் நமது சமுதாயம் உயர்கல்வி விவகாரத்தில் தேர்வு செய்து எதிர்நோக்கும் பிரச்சனைகளை.

இந்த உயர்கல்விக் கூடங்களுக்கு வாய்ப்பில்லாத மாணவர்கள் ஒரு பிரிவினர்கள் உடல் உழைப்பு தொழிலாளர்களாகவும், இன்னொரு பிரிவினர் குண்டர் கும்பல் அடியாட்களாகவும் உருமாறுகிறார்கள். இளைய சமுதாயம் சீரழிவதற்கு மிக முக்கிய பங்காக அமைவது இந்த உயர்கல்வியிலிருந்து இளைய சமுதாயம் குறிப்பாக இந்திய இளைஞர்கள் விடுப்படும் போது. சரியான தீர்க்கமான முடிவினை எடுக்க முடியாமல் தடுமாறி கலந்து ஆலோசிக்கவும் தெரியாமல். அப்படியே இருந்தாலும் மேலே குறிப்பிடதுப்போல் இந்த வெள்ளைச் சட்டைக் கோலர் கொள்ளையர்களிடம் அகப்பட்டு எதிர்காலத்தில் கல்விப்பெற்றும் கடனாளியாக உருமாறி, படித்தது ஒரு துறையாகவும் பிறகு படித்து முடித்து வேவலை செய்வது ஒரு துறையாகவும் இருக்கும்.

மாணவிகளை பொறுத்தவரை ஒரு பெரிய அளவிலான தொகையில் பிசியோதிராப்பி என்கிற உடற்பயிற்சித் துறைகான மருத்துவம் சார்ந்த துறையில் தனியார் கல்லூரிகளில் ரிம 70 ஆயிரம் வெள்ளிக்கும் மேற்பட்டு பிடிபிடிஎன்னில் கடன் பெற்று படிப்பதுடன், அவர்களில் பெரும்பாண்மையோர் வெலையின்றி தவித்து வருவதாகவும் ஜனநாயக செயல் கட்சியின் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினரான வி.சிவகுமார் அவர்கள் தனது ஆய்வறிக்கயில் குறிப்பிட்டிருந்ததை இந்நேரத்தில் இங்கு நினைவுக்கூற விரும்புகிறேன். மேலும், நேரடி விற்பனைத்துறையான சேல்ஸ் அன்ட் மார்கேட்டிங் துறையிலும் சாதனைப்படைக்கலாம், உயர்நிலைப்பெறலாம் போன்ற ஆசை வார்த்தைகளைக் கூறிக்கொண்டு ஒரு சில தனியார் கல்விக்கூடங்கள் லாபத்தையே குறிக்கோளாக கொண்டு மாணவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

இது போன்ற அவல நிலையிலிருந்து மாணவர்களும் பெற்றோர்களும் விடுதலைப்பெற வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் இந்த கட்டுரையை நான் எழுத வேண்டும் என்கிற சிந்தனை எனக்கு உருவானது. ஆகவே மாணவர்களே பெற்றோர்களே கடனாளி சமுகமாக உருமாறுவதிலிருந்து தடுக்க வேண்டுமெனில், இந்த கல்வியை தவனை முறையில் வட்டியுடன் விற்கும் வெள்ளைச் சட்டைக் கோலர் கொள்ளையர்களிடம் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுறுத்திக் கொள்ள விரும்புகிறேன். நாட்டின் மனித மூலதன தேவையை துள்ளியமாக அறிந்து செயல்படுவதுடன். இன்றைய நவீன தொழில்நூட்ப உலகமயமாக்கலின் புரட்சியை உணர்ந்து மாணவர்களும் பேற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பதை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக 2017ஆம் ஆண்டில் எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் தேர்வினை எழுதி சிறப்புத்தேர்ச்சினைப் பெறாத மானவர்களையும் அவர்களது பெற்றோர்களையும்.

ஆக்கம் – சிவசீலன்
தலைமை நிருபர்
ஜனநாயக செயல் கட்சி
தலைமையகம்

Comments

Popular posts from this blog

மலேசியா வாழ் ஹிந்துக்களுக்கு !

செந்தமிழ் நாட்டாரே.

மரமே மரமே