சாதியப்பேய்களின் கொட்டத்திற்கு சவுக்கடி !
ஆண்டாண்டு காலமாக நமது தாய் திருநாடான மலேசியாவில் வீற்றிருக்கும்ஆலயங்களில் ஒருசில ஆலயங்கள் சாதிய கட்டமைப்பினால் நிறுவப்பட்டு, பராமாரிக்கப்பட்டு குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர்கள் மட்டுமே முக்கிய பொறுப்புகள் வகிப்பது முதல், ஆலய வழிப்பாட்டு முறையிலும் தலையீட்டு தீண்டாமையை காலம் காலமாக பின்பற்றி நஞ்சேனும் சாதியத்தை இந்த நாட்டிலும், சமூகத்திலும் விளைத்து வந்துள்ளதை யாவரும் மறுக்க முடியாத ஒரு கூற்று.
இந்த கொடூர சாதிய சிரங்கை கெட்டியாய் பிடித்து வந்த பினாங்கில் ஒரு ஆலயத்தின் முகத்திரையை கிழித்ததுடன், தமது சீரிய முயற்சியில் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி தலைமையில் ரிம 3 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் சார்பில் இந்தாண்டு மாநில தைப்பூச விழாவில் ஊர்வலமாய் பவனி வரும் தங்க ரதமானது, சாதியப்பேய்களின் கொட்டத்திற்கு விழும் முதல் சவுக்கடி என்றால் மிகையில்லை.
பினாங்கு மாநிலத்தில் குறிப்பாக தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பாளிகாமல் தன்னிச்சையாக செயல்பட்டு, ஆண்டாண்டு காலமாய் ஒரு சமூகத்தினருக்கு மட்டுமே முதல் மரியாதையும் கவுரவத்தையும் வழங்கி வந்து. உண்டியல் பணம் மூலம் பெறப்பட்ட வசூல்களின் எண்ணிகையையும் பொதுவில் அறிவிக்காமல், இதுநாள் வரையிலும் உண்டியல் மூலம் பெறப்படும் வசூல் பணங்களை வைத்து கொண்டு ஒரு குறிப்பிட்ட சமூகம் சுகபோக வாழ்க்கையை வெளிநாட்டில் வாழ்ந்து வருவது கண்டனத்திற்குரியது.
கொள்ளையடித்த அந்த கும்பல்களின் கொட்டத்தையும் வெளி வேசமும் ஒட்டுமொத்தமாய் களைந்து விட்டதை கண்டு மக்கள் கொதிப்படைந்து இருப்பதை கண்டு சகிக்க முடியாத அவர்கள் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு வருகின்றனர் ஆங்காங்கே.
அதனை முறியடிக்கும் வகையிலும், நாட்டில் புரையோடி கொண்டிருக்கும் சாதிய தீண்டாமைக்கும், ஆலயங்களை பிடித்துள்ள சாதியப்பேய்களுக்கும் விழும் முதல் மரண அடி தான் இந்த தங்க ரதம் ஊர்வலம். அதனோடு தமிழர்களை அடக்கி ஆள நினைத்து பார்க்க துடிக்கும் எந்த ஒரு பிரிவினருக்குமான அபாய ஓசைதான் இந்த தங்க ரத ஊர்வலம் என்பதனை மானமுள்ள தமிழர்களின் சார்பில் கம்பீரமாய் முழங்குகிறோம்.
ஆக்கம் – சிவசீலன்.
தலைமை நிருபர்
ஜனநாயக செயல் கட்சி.
தலைமை நிருபர்
ஜனநாயக செயல் கட்சி.

Comments
Post a Comment