DAP
கெர்க் கீம் ஹோக் ஒரு சகாப்தம் – குலசேகரன்
ஜனநாயக செயல்கட்சியின் முன்னாள் தேசியப் பொதுச் செயலாளரான கிம் ஹொக் அவர்களின் 60 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மிகவும் எளிமையாக மலாக்கா மக்கோத்தா மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது. புற்று நோயினால் பாதிப்புற்று இருக்கும் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்து கொண்டிருக்கும் அவரை ஜனநாயக செயல்கட்சியின் முக்கிய தலைவர்கள் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
ஆஸ்திரேலியாவில் பொறியியலாளர் துறையில் பட்டப்படிப்பை முடித்தவரான இவர்,1999 முதல் 2004 வரை ஜனநாயக செயல்கட்சியின் தலைமைப் பொதுச் செயலாளராக அவர் பதவி வகித்து வந்துள்ளார். 1990 முதல் 1995 வரை முதன் முதலாக ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிப்பெற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மலாக்காவை பூர்வீகமாக கொண்ட இவர் பிறகு தனது சொந்த மாநிலத்தில் கோத்தா மலாக்காவில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். சரியாக 2004 இல் ஜனநாயக செயல்கட்சி தலைமைப் பொறுப்பில் இருந்து விலக, அவரை பின் தொடர்ந்து அந்த தலைமைப் பொறுப்பிற்கு இன்றைய ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.குலசேகரன் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் துன் டாக்டர் மகாதீர் காலத்தில் தேசிய முன்னணியை கடுமையாக எதிர்த்து வந்ததின் விளைவு இவர் ஒப்பராசி லாலாங் கைது படலத்தில் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டவர் என்றும் மலேசியாவில் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல எதிர்ப்புகளை கொடுத்து வந்தவர் இவர் என்றார் எம். குலசேகரன்.

என்னை கவர்ந்த தலைவர் - பி.குணா
எனக்கு பிடித்த தலைவர்களில் ஒருவர் கெர்க் கீம் ஹோக் என்று தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார் செனவாங் குணா, 2004 அவர் தலைமைப் பொதுச் செயலாளராக இருந்த காலக்கட்டத்தில் சிரம்பான் பட்டணத்தில் நடு மையமாக அன்று விளங்கிய புக்கிட் கெப்பாயங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட எனக்கு அன்று வாய்ப்பளித்தவர் கெர்க் கிம் ஹோக். சீனர்களே அதிகம் வாழ்ந்த அந்த தொகுதியில் எந்த இனப்பாகும் பார்க்காமல் இந்தியரான என்னை அவர் தேர்ந்தெடுத்தது அவரின் மலேசியன் மலேசியா கொள்கையின் பிரதிபலிப்புத்தான் என்றும் அவர் கூறினார்.
2004 அன்றைய பிரதமர் துன் அப்துல்லா அஹ்மாட் படாவி அவர்களால் துவக்கப்பட்ட தேசிய ஒற்றுமை நல்லிணக்க குழுவில் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் கெர்க் கீம் ஹோக். அவரின் உயர்ந்த குணங்களும், நல்லிணக்க செயற்பாடுகளும் பாரிசான் நேஷ்னால் அரசாங்கத்தால் அப்பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார் என்பதனையும் குணா அவர்கள் நினைவுக்கூர்ந்தார். கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் அவரை போன்று இனப்பாகுப்பாட்டை களைந்து மலேசியர் என்ற ரீதியில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கட்சியில் உள்ள இளைய தலைமுறையினரை கேட்டுக் கொண்டார் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் குணா அவர்கள்.

Comments
Post a Comment