டிலோயிட் தணிக்கை நிறுவனம் நம்பகத்தன்மை வாய்ந்ததா !!!
அனைத்துலக கணக்காய்வு தணிக்கை நிறுவனமான டிலோயிட் நிறுவனத்தை சாதகமாக பயன்படுத்தி அதன் பெயருக்கு தீராத களங்கத்தை 1எம்டிபி முதலீட்டு நிறுவனம் ஏற்படுத்தியிருக்கிறது.
டிலோயிட் நிறுவனம் 1எம்டிபி நிறுவனத்துடன் இணைந்து கடந்த காலங்களில் அந்த முதலீட்டு நிறுவனத்தின் ஊழல்களை மூடி மறைத்து வந்துள்ளது.
1எம்டிபி நிறுவனத்தில் இருந்து களவாடப்பட்ட பல கோடி வெள்ளிகளுக்கு டிலோயிட் கணக்காய்வு தணிக்கை நிறுவனம் பல்வகைகளில் மூடி மறைக்க துணைப் புரிந்து வந்துள்ளது.
சமீபத்திய அமெரிக்கா சட்டத்துறை தலைமையகம் தொடுத்திருக்கும் சிவில் வழக்கு குற்றப்பத்திரிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா சட்டத்துறை அலுவலகம் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் முடிவுறும் வரை 1எம்டிபி நிறுவனத்தின் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையானது செல்லாது.
இதன் விளைவு டிலோயிட் தணிக்கை கணக்காய்வு நிறுவனத்தின் நம்பகத்தன்மை 1எம்டிபி விவகாரத்தில் கேள்விக்குறியாகவே இருக்கும்.

Comments
Post a Comment