கவிதைகள்
மனிதனுக்காக.
இந்த நொடி பொழுதில்
எங்கோ ஓர் இல்லத்தின்
கூரை மீது குண்டு மழை
பொழிந்திருக்கலாம்...
எங்கோ ஓர் தெருவில்
ஒரு போராட்டக்காரன்
சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம்...
எங்கோ ஓர் அடர்ந்த
காட்டுக்குள் ஒரு இனத்தையே
அழித்து புதைக்கப்பட்டிருக்கலாம்...
எங்கோ ஓர் பூட்டிய அறையில்
அந்த பெண் அனுமதியின்றி
ஒரு மனித மிருகம்
புணர்ந்துக் கொண்டிருக்கலாம்...
எங்கோ ஓர் குப்பைத்தொட்டியில்
அவசரமாக ஈன்றெடுத்த
அந்த சிசுவை வீசியிருக்கலாம்...
அத்தனையும் பார்த்துக்கொண்டு
இந்த நொடி பொழுதில்
ஒரு விதை முளைத்து
மனிதனுக்காக..................................................................கரிமா வளவன்
Comments
Post a Comment