எம்மக்களே !




அரசியல் 
அகதிகளாய் 
உரிமையற்ற 
ஊமைகளாய்... 

காலமாய் களமாய் !

கோனும்  கோலும் 
சதிராட்டமாட 
வெள்ளோட்டக் காட்சிகள் 
பொழுதொரு நாள்...

வண்ணமாய் வளம் வர !

முடிவில்லாத 
கதைகளுக்கு 
முற்றுப்புள்ளியிட  
கோமாளிகள் 
துணிவதேன்...

வரலாற்றுப்பிழையா !

விடியலும் 
புரட்சியும்
சேமப்படையில் 
அலுத்திற்று...

அடக்குமுறையால் !

ஒடுக்குமுறைகள்  
மரணித்துப்போகாதா !
ஜனநாயக உரிமை
நிலைப்பெறாதா !

வேட்கை விரக்தியால் !

அடிமை சாசனம் 
நிரந்திரமா ! 
மாற்றான் சுதந்திரம்
தான் சுவாசமா...

 எம்மக்களே !

ஆக்கம் - கரிமா வளவன் 
28.2.2020

Comments

Popular posts from this blog

மலேசியா வாழ் ஹிந்துக்களுக்கு !

செந்தமிழ் நாட்டாரே.

மரமே மரமே