அகற்றியது நன்று நிலைநிறுத்துவது என்று !
2017 ஆம் ஆண்டு நடந்த பெயர்மாற்று சர்ச்சைக்கு 2021 ஆம் ஆண்டு நிறுத்திவைப்பு என தீர்வினை பெற்றுள்ளதுதான் நம்பிக்கை கூட்டணி அரசும் அதன் இந்தியத்தலைவர்களும். 100 ஆண்டுகளை கடந்த வரலாற்றுப்பூர்வ செட்டி திடலின் பெயரை நிலைநிறுத்த தவறியது மற்றும் நிறுத்திவைப்பு என நாடகம் நடத்தியதுதான் உங்கள் மூன்று தவணை சிலாங்கூர் மாநில நல்லாட்சியின் செயலா !
2008 இல் செட்டி திடலின் தொகுதிக்குட்பட்டு வெற்றிப்பெற்றவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு மானோகரன் மலையாளம், அதன் பிறகு 2013 இல் அத்தொகுதியில் வெற்றிப்பெற்றவர் இன்றைய சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ். இன்று அத்தொகுதி ஜசெக வை பிரதிநிதித்து ஒரு சீனர் மாண்புமிகு டோனி லியோங் வெற்றிப்பெற்றுள்ளார். மேலும், மூன்று தவணை கிள்ளானில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மாண்புமிகு உலக அறிவாளி சார்லஸ் சந்தியாகு என்கிற தியாகு என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2008 முதல் இன்று 2021 வரை அத்தொகுதியில் நகராண்மைக்கழக உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஜசெகவை பிரதிநிதிப்பவர்கள். தொடர்ந்து இந்தியர்களே பெருவாரியாக நகராண்மைக்கழக உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இருந்தும் நகராண்மைக்கழகத்தில் 2017 இல் நடந்த பெயர் மாற்று சர்ச்சை மற்றும் இன்று 2021 இல் நடந்த பெயர் மாற்று சர்ச்சையும் தெரியாமல் போனார்களா அல்லது அறியாமல் போனார்களா இக்கோமாளிகள்.
2017 இல் நடந்த போதே அதற்குரிய தீர்வினை எடுக்க தவறியதன் விளைவும், கவனக்குறைவின்மையே இன்று இந்த அவல நிலைக்கு காரணம். இன்னும் இன்னும் எத்தனை முறை, முறையீடு என்கிற பெயரில் மண்டியிட போகிறீர்கள் மாநில முதல்வரிடம் அரசியல் அடிமைகளே. தமிழர்களின் அடையாளங்கள் மிஞ்சி இருப்பதே சொற்பம் , அதனையும் காவு கொடுக்க உங்கள் நகராண்மைக்கழக உறுப்பினர்களும், நம்பிக்கை கூட்டணி இந்தியத்தலைவர்களின் பொறுப்பற்ற அலட்சிய செயலால் இழந்தால், அச்செயலானது கிள்ளான் வாழ் தமிழர்களுக்கு இழைக்கும் அநீதிக்கு நிகர், வரலாற்று துரோகம் என்பதனை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
2017 இல் நடந்த சர்ச்சை 2021 லும் உங்களால் தீர்வுக்கு கொண்டு வரமுடியவில்லை என்றால் இதற்கு விடியல் தான் எப்போது ? பதில் கூறுங்கள் இரண்டு தவணை ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ், 3 தவணை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சார்லஸ் சந்தியாகு மற்றும் இன்றைய சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங் மாண்புமிகுகளே. மீண்டும் மீண்டும் கிள்ளான் வாழ் தமிழர்களின் சார்பில் உங்கள் மூவருக்கும் நான் நினைவுறுத்தி, அறிவுறுத்தி கேட்டுக் கொள்வது என்னவெனில்! முடியவில்லையெனில் ஒதுங்கிவிடுங்கள் மரியாதையோடு.
கிள்ளான் வாழ் தமிழர்களும், நல்லுள்ளம் கொண்ட இனமான தமிழர் அமைப்புகளும், பெரியவர் ஓம்ஸ் பா. தியாகராஜன் அவர்களோடு இணைந்து இப்பெயர் மாற்று சர்ச்சைக்கு நாங்களே நல்லதொரு தீர்வினை கிள்ளான் நகராண்மைக்கழகத்தோடு இணைந்து சுமுகமாய் பேசி எங்கள் வரலாற்றை நிலைநிறுத்துகிறோம் என்பதனை பணிவன்புடன் தெரிவிக்கின்றேன்.
ஆக்கம் - சிவசீலன்
ஜனநாயக செயல் கட்சி
கிள்ளான்.
ஆக்கம் - சிவசீலன்
ஜனநாயக செயல் கட்சி
கிள்ளான்.


Comments
Post a Comment