இனநலன் காப்போம்.

ஈழத்தமிழர் சொந்தங்களுக்கு உரிய நேரத்தில் கைகொடுத்தார் பேராசிரியர் பி.ராமசாமி.

               இந்தோனெசியாவில் ஆச்சே மாநிலத்தில் தஞ்சம் அடைந்த ஈழத்தமிழர் சொந்தங்களுக்கு தக்க நேரத்தில் உதவிக்கரம் நீட்டி அடைக்கலம் பெற்றுத் தந்த பினாங்கு மாநில முதல்வரின் செயல் மிகவும் போற்றத்தக்கது.

              சொந்த நாட்டில் வாழ வழியற்று உயிருக்கு அஞ்சி குடும்பத்துடன் தப்பி கடல் மார்க்கம் வழியாக தங்கள் பயணத்தை மேற்கொண்ட அந்த மக்களுக்கு, ஆச்சே மாநில கவர்னரிடம் பேசி அடைக்கலமும், தங்குவதற்கு  அனுமதியும் பெற்றுத் தந்துள்ளார் பேராசிரியர் பி.ராமசாமி.

              அவரின் செயல் உலக வாழ் தமிழர்களின் மத்தியில் நற்பெயரையும் அதே நேரத்தில் ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு உதவ ஒரு போதும் ஜனநாயக செயல்கட்சி பின் வாங்காது என்பதைனை உறுதிப்படுத்தியுள்ளது.

             இந்தியர்கள் பிரதிநிதி என்று மார்தட்டிக் கொள்ளும் மஇகாவினர்கள் அமைச்சரவையில் அதிகாரத்தில் இருந்தும், மனிதாபிமான அடிப்படையில் கூட உதவிகளைச் செய்ய முன் வரவில்லை.

            பேராசிரியரின் தலைமையில் அவர்தம் குழு நேரடியாக அங்கே சென்று நிலவரத்தை கேட்டறிந்து உதவியது. அம்மக்களுக்கு பெரிதும் ஆறுதலாக அமையப் பெற்றிருக்கும்.  

            தமிழகத்தில் இருந்து இது வரை ஒருவர் கூட வாய் திறக்காமலும், உதவிக்கரமும் நீட்டாத பட்சத்தில் ஜனநாயக செயல்கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் ராமசாமி மட்டுமே முடிந்த உதவிகளை வழங்கியுள்ளார்.

            செய்வதறியாது அடைக்கலம் கோரும் ஈழத்தமிழ் சொந்தங்களை நட்டாற்றில் விட்டுவிட்டு தமிழக சட்டமன்றத்தில் தற்சமயம் கச்சத்தீவை மீட்போம் என்று ஆளும் அரசாங்கமும், எதிர்க்கட்சியும் மாறி மாறி வசைப்பாடுகிறார்கள்.

           இந்தியா என்கிற ஒன்றுப்பட்ட ஐக்கியத்தில் தமிழகம் இருக்கும் வரை கச்சத்தீவை மட்டும் அல்ல, அங்கே துள்ளி விளையாடும் மீன்களை கூட இவர்களால் மீட்டு வர முடியாது என்பதே உண்மை.

ஆக்கம் - சிவசீலன்
ஜனநாயக செயல் கட்சி
தலைமையகம், மலேசிய.

Comments

Popular posts from this blog

மலேசியா வாழ் ஹிந்துக்களுக்கு !

செந்தமிழ் நாட்டாரே.

மரமே மரமே