மலேசியா தமிழ்ப்பள்ளிகளின் சவால்களும் எதிர்காலமும்

       கடந்த 21.8.2016 மலேசிய இந்திய பாரம்பரிய சங்கத்தின் ஏற்பாட்டில் நடந்த மலேசியா தமிழ்ப்பள்ளிகளின் சவால்களும் எதிர்காலமும் என்ற கலந்துரையாடலில் சங்கத்தின் சார்பிலும், வருகைப் புரிந்த பார்வையாளர்களின் சார்பிலும் வெற்றிகரமாக தமிழ்ப்பள்ளிகளின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்காகவும், உயர்விற்காகவும் அனைவரும் ஒன்று சேர்ந்து 9 தீர்மானங்களை நிறைவேற்றினர்.
                         
                                         அதன் 9 தீர்மானங்களின் :

1) நாட்டில் உள்ள 524 தமிழ்ப்பள்ளிகளின் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே பள்ளி வாரியக்குழு இயங்குவதால், இன்னும் செயல்படாமல் இருக்கும் எஞ்சியுள்ள மற்ற பள்ளிகளிலும் பள்ளி மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வாரியக்குழு அமைத்திடல் வேண்டும். கல்வி அமைச்சு சட்டத்திட்ட விதிப்படி ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயம் வாரியக்குழு அமைத்திடல் வேண்டும் என்பதை நினைவுறுத்தி சங்கத்தின் முதல் தீர்மானமாக முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

2) அரசாங்கத்தின் முழு உதவி பெறும் பள்ளிகளாக இல்லாத தமிழ்ப்பள்ளிகள், உடனடியாக முழு உதவிப்பெறும் பள்ளிகளாக அதன் தகுதியைக் கல்வி அமைச்சு உறுதி செய்திடல் வேண்டும் என்று இரண்டாவது தீர்மானமாக முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

3) அரசியல் வேறுபாடுகளைக் களைந்து பள்ளியின் உயர்வுக்கு வழிவகுக்கும் நோக்கத்தில், ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நடத்தும் நற்காரிய செயல்களுக்குப்  பள்ளி நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று மூன்றாவது தீர்மானமாக முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

4) உறுதியளிக்கப்பட்ட காலத்திற்குள் தற்சமயம் நிர்மாணிப்பில் இருக்கும் புதியப் பள்ளிகளின் அனைத்துக் கட்டப் பணிகளும் முடித்தல் வேண்டும் என்று நான்காவது தீர்மானமாக முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

5) பினாங்கு மாநில நம்பிக்கை கூட்டணி அரசின் முயற்சியில் நிலமும் மானியமும் நாட்டின் முதல் தமிழ் இடைநிலைப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்டப் பின், அதனை நிறைவேற்ற கல்வி அமைச்சு உடனடியாக காலதாமதமின்றி உரிமம் வழங்கிட வேண்டும் என்று முன்மொழியப்பட்டு ஐந்தாவது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.

6) ஒவ்வொரு தமிழ்ப்பள்ளிகளிலும் மலழையர் பாலர்பள்ளி இயங்க பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியக்குழு மற்றும் பெற்றோர்கள் உறுதி செய்திடல் வேண்டும். தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்களின் புதிய சேர்க்கைக்கும் சரிவு ஏற்படாமல் இருப்பதற்கும் இந்தப் பாலர் கல்வி இயங்குவது உறுதி செய்யப்படும் என்று ஆறாவது தீர்மானமாக முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

7) புதிய நகர் மேம்பாட்டுத் திட்டங்களில் இந்தியர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு புதிய தமிழ்ப்பள்ளிகள் எழுப்புவதற்கு அரசாங்கம் உறுதி செய்திடல் வேண்டும் என்று ஏழாவது தீர்மானமாக முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன. 

8) தேசியப் பள்ளிகளுக்கு நிகராக தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் தலா ஒரு மாணவர் தனிநபர் ஒதுக்கீடு தகுதி நிதியை நிலைநிறுத்த வேண்டும் என்று எட்டாவது தீர்மானமாக முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

9) தேசிய இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்ப்பள்ளியிலிருந்து வரும் மாணவர்களுக்குக் கட்டாயப் பாடமாக தமிழ் மற்றும் இலக்கியப் பாடம் போதிக்கப்பட ஒன்பதாவது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.

இந்த ஒன்பது தீர்மானங்களையும் அடுத்த வர இருக்கின்றன வரவுச் செலவு திட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கல்வி அமைச்சின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும் என்றும், இதன் ஒன்பது தீர்மானங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக கல்வி அமைச்சும், அரசாங்கமும் நிறைவேற்றும் வரை நாடாளுமன்றத்தில் தாம் பின்வாங்கப் போவதில்லை என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் அவர்கள் தலைமையில் நடந்த மலேசிய இந்தியர் பாரம்பரிய சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் சவால்களும் எதிர்காலமும் தலைப்பில் நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டோரின் முன் உறுதியளித்தார்.

ஆக்கம் - சிவசீலன் 

Comments

Popular posts from this blog

மலேசியா வாழ் ஹிந்துக்களுக்கு !

செந்தமிழ் நாட்டாரே.

மரமே மரமே